வேலூர் மாவட்டத்தில்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை-2024 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வேலூர் மாவட்டம் காட்பாடி விளையாட்டு மைதானத்தில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப. கார்த்திகேயன் (வேலூர்), வி. அமுலு விஜயன் (குடியாத்தம்), மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 1 வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் ரவே. வேல்முருகன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சரவணன், மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அ. பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

