சென்னை, அயன்புரம் வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. வே.செல்வநாயகம்
அவர்களுக்கு ஸ்டார் பிக்ஸின் 25 வருடம் சிறந்த வணிகர் சாதனையாளர் விருதை வழங்கினார்கள்
சென்னை, மயிலாப்பூர், சவேரா ஓட்டலில் நல்லாட்சி 12 ஆண்டுகள், மாலை நியூஸ் 9 ஆண்டுகள் ஸ்டார் பிக்ஸ் மாலை FM துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள் மற்றும் நக்கீரன், ஆசிரியர் உயர்திரு நக்கீரன் கோபால் அவர்கள் கலந்து கொண்டு 25 வருடம் சிறந்த வணிகர் சாதனையாளர் விருதை சென்னை, அயன்புரம் வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் வே.செல்வநாயகத்திற்கு சிறந்த வணிகருக்காக ஸ்டார் பிக்ஸ் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
சென்னை அயன்புரத்தைச் சார்ந்த வே.செல்வநாயகம் 25 வருடத்திற்கு முன் தெரு வியாபாரத்தில் ஆரம்பித்து படிப்படியாக சிறுகடை வைத்து மக்களிடம் சிறந்த சேவை செய்தும் அயன்புரம் வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம்
அயனாவரம், நிறுவனர் – தலைவராகவும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மத்திய சென்னை மாவட்டம் வியாபாரிகள் சங்கம்
தலைவர் பொறுப்புகளைப் பெற்றுள்ளார். இப்பொழுது ஆர்த்தி அண்ட் கோ பர்னிச்சர் பெரிய கடையும் ஏ.வி.எஸ் பார்ட்டி ஹால், எஸ்.வி.எஸ் கேட்டரிங் சர்வீஸ் போன்ற வியாபாரம் செய்து வருகிறார். இவரது கருமையான உழைப்பையும், வளர்ச்சியையும் பாராட்டி ஸ்டார் பிக்ஸ் நிறுவம் ஸ்டார் பிக்ஸ் எக்சலண்ட் 2024-க்கான விருது வழங்கி பாராட்டியுள்ளது

