உடுமலை. அக் 3-
உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்ட்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு இலவச பயிற்சியில் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது டி.என் – பி. எஸ்.சி குரூப் 4 மற்றும் மத்திய மாநில காவல் ஆய்வாளர்களுக்கான பயிற்சி ,
கணினி சார்ந்த டேலி, யோகா, டெய்லரிங் மற்றும் ஆரி. போன்ற பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
கடந்த 6 மாதங்களாக டேலி யோகா. டெய்லரிங். ஆரி. போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா லெப்டினெனட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே ஆர் செல்வராஜ் தலைமை வகித்தார். உடுமலை பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் திருப்பூர் ஜெய் ஸ்ரீ ராம் இன்ஜினியரிங் கல்லூரியின் நிர்வாக அதிகாரி எம். சந்திரசேகரன் கல்லூரி டீன்,முனைவர் மேகலாதேவி உடுமலை அரசு கலைக் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் செல்வநாயகம் உடுமலை லயன்ஸ் கிளப் தலைவர் யோகானந்த் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க தலைவர் ராமலிங்கம். விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி, பயிற்சி மைய தலைமை பயிற்சியாளர் ரிச்சர்ட் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினர். இதில் கடந்த 6 மாதங்களாக பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திருப்பூர் ஜெய் ஸ்ரீ ராம் இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் 10 கம்ப்யூட்டர்கள் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர். செல்வராஜிடம் வழங்கினர்.
வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப் 4 மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் காவல்துறை ஆய்வாளர் போன்ற பதவிகளுக்கான தேர்வு வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டபயிற்சி வகுப்புகளில் பயன் பெற்ற மாணவ மாணவியர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு தொகுத்து வழங்கினார்.
previous post

