மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது.
பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா. பாக்யராஜுக்கு விருது.
திண்டிவனம், அக்.8:
சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நல்லாட்சி 12 ஆண்டுகள், மாலை நியூஸ் 9 ஆண்டுகள் மற்றும் ஸ்டார் பிக்ஸ், மாலை எப்எம் துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் சவேராவில் நடைபெற்றது.
மாலை நியூஸ் ஆசிரியர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு ஸ்டார் பிக்ஸ் எக்சிலென்ட் விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பூங்கா. பாக்யராஜ் அவர்களுக்கு, ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, 5 கோடி லிட்டர் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு புதிய குளம் அமைத்து நீர் நிலைகளை பாதுகாக்க உறுதுணையாக இருந்தும், தொடர்ந்து மக்கள் பணி செய்து, மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றமைக்காக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி மற்றும் நக்கீரன் கோபால், மாலை நியூஸ் ஆசிரியர் கதிர்வேல் ஆகியோர் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருது பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பூங்கா. பாக்யராஜுக்கு வழங்கி கௌரவித்தனர்.

