கடலூர். அக்டோபர் .4. காந்தியின் பிறந்த நாளை சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நாளாக கடலூர் குளோபல் தொண்டு நிறுவனம் சார்பில் வெள்ளி கடற்கரையில் நடைபெற்றது. இரத்த உறவுகள் அறக்கட்டளை யின் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார், ஸ்மைல் அறக்கட்டளையின் நிறுவனர் வின்சென்ட் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் உறுப்பினர் இளங்கோவன், எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தின் பொறுப்பாளர் கதிரவன், எம் .எஸ். சாமிநாதன் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் முதன்மை விஞ்ஞானி ராஜ்மோகன் ,மற்றும் மாவட்ட நாட்டு நலப்பணிதிட்டம் தலைவர் திருமுகம் ஆகியோர் கலந்து கொண்டணர். நர்சிங் கல்லுரி மாணவிகள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை குளோபல் நிறுவனத்துடன் சேர்ந்து கடலூர் இரத்த உறவுகள், ஸ்மைல் அறக்கட்டளை மற்றும் கோபிகா சமூக கல்லூரி இணைந்து நடத்தினர். விழிப்புணர்வு நோக்கவுரை கோபால் வழங்கினார். கிரிஸ்டோபர் நன்றி கூறினார்.
previous post

