Maalai News
சினிமா

திடீரென சரிந்து விழுந்த மேடை.. நூலிழையில் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்

தெலுங்கானா,

தமிழ் சினிமாவில் தொடந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு மொழி படங்களில் தான். நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகனை, தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டு வந்தவர் இயக்குனர் நெல்சன்.

2021ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார் பிரியங்கா. டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, டான் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெற்றிபெற்றது. கடைசியாக, தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியான நிலையில், வரும் தீபாவளிக்கு பிரியங்கா மோகன் – ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதை தவிர பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஓஜி என்கிற படத்திலும் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானாவில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்டநிலையில் தீடீரென மேடை சரிந்ததால் அனைவரும் கீழே விழுந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் பாதுகாவலர்களால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கியதாக, சமூக வலைதளத்தில் வெளியான பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் வலைதளத்தில், “இன்று தொரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. தற்போது நான் நலமாக இருக்கிறேன், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும். அவர்கள் எனக்கு அனுப்பிய அன்பு மற்றும் அக்கறையின் அன்பான செய்திகளுக்கு அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

காஸ்டிங் ஏஜென்டுகள் விவகாரம்: சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் எச்சரிக்கை

Administrator

நடிகை சமந்தா குறித்து சர்ச்சை கருத்து: தெலுங்கானா மந்திரிக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கண்டனம்

Administrator

ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல்.. நடிகை பார்வதி நாயரின் உருக்கமான அறிக்கை

Administrator

Leave a Comment