ஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்
புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின் புதிய கோவில், உணவு கூடத்தையும் திறந்து வைத்தனர்
பாண்டிச்சேரி கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள
ஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்
புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின் புதிய கோவில், உணவு கூடத்தையும் ரிப்பன் கட் செய்து குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.
மேலும் புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆன்மிகப் பயிற்சி மற்றும் சாத்வீக உணவைப் பெறுவதற்காக, தர்மசாலா மற்றும் உணவு திட்டம் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் Dr D C ஜெயின் விருந்தினராக அழைக்கப்பட்டு அவர்களுக்கு சால்வை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.
2008 ஆம் ஆண்டு 20 பசுக்களுடன் தொடங்கப்பட்ட கௌசாலா, இன்று 500க்கும் அதிகமாக பசுக்களை குஷால் ராஜ்ஜி, பிரவீன் சோலங்கி, அனில் குமார்ஜி ஸ்ரீமால் ஆகியோர் பசுக் கூடத்தை பராமரித்து வருகின்றனர்
மேலும் புதிதாக கட்டப்பட்ட தர்மசாலாவின் ஸ்பான்சர் சுரேஷ் குமார் ஜி, சந்தன் மல்ஜி நகோத்ரா ஜி, இது தவிர உணவு கூடத்தை ஸ்பான்சர் பவாரி பாய் கேவர் சந்த்ஜி மற்றும் ஜெயின் சமுதாயத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

