Maalai News
உலகச் செய்திகள்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை பயணம்; அதிபரை சந்திக்கிறார்

கொழும்பு,

இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அனுரகுமரா திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றிபெற்றது.  இலங்கை அதிபராக அனுரகுமரா திசநாயகே பொறுப்பேற்றுள்ளார். அதேபோல், இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை சென்றுள்ளார். புதிய அரசு அமைந்தபின் இலங்கைக்கு செல்லும் முதல் வெளிநாட்டு முக்கிய தலைவர் ஜெய்சங்கர் ஆவார்.

இலங்கை சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் அனுரகுமரா திசநாயகே மற்றும் பிரதமர் ஹரினியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இந்தியா இலங்கை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையில் இந்தியாவின் உதவியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை மேலும் அதிகரித்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Related posts

இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை

Administrator

ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை

Administrator

தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்’ – ஈரான் எச்சரிக்கை

Administrator

Leave a Comment