திண்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு விதைகள் உள்ளிட்ட இரு பொருட்களை வழங்கினார்.
இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெறப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் பணிகளை முன்கூட்டியே துவங்கி உள்ளனர். அதனைத் தொடர்ந்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல், உளுந்து, பனிப் பயிறு, மணிலா உள்ளிட்ட விதைகள், நுண்ணுரங்கள், ஜிப்சம், உயிர் உரங்கள் முதலிய இடு பொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் ஆய்வு செய்து வருகிறார். சிறுவாடியில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்த அவர் அங்கிருந்த விவசாயிகளுடன் பேசுகையில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தவும், பி எம் கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இ கே ஒய் சி செய்திடவும், உயிர் உரங்கள், நுண்ணுயிரங்களை பயன்படுத்திடவும் கேட்டுக்கொண்டார். அங்கிருந்து விவசாயிகளுக்கு நெல் பி பி டி 5204, ஏ டி டி 39, டி பி எஸ் 5, வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகளையும், உளுந்து விதைகளையும் 50 சதவிகித மானியத்தில் வழங்கினார். நிகழ்ச்சியில் மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், துணை வேளாண்மை அலுவலர் கதிரேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரஞ்சனி, ராஜேஸ்வரி, கிடங்கு மேலாளர் கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
next post

