Maalai News
சினிமா

‘கோட்’ என்ற மோதிரத்தை அணிந்திருக்கும் விஜய் – வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் ‘கோட்’ என்ற மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி கடந்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘தி கோட்’ படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 440 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘தி கோட்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் ‘கோட்’ என்ற மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் ‘தி கோட்’ படத்தை தொடர்ந்து, தனது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் நடிக்க உள்ளார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, நரேன், பிரகாஷ் ராஜ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

Related posts

நடிகை சமந்தா குறித்து சர்ச்சை கருத்து: தெலுங்கானா மந்திரிக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கண்டனம்

Administrator

திடீரென சரிந்து விழுந்த மேடை.. நூலிழையில் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்

Administrator

ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல்.. நடிகை பார்வதி நாயரின் உருக்கமான அறிக்கை

Administrator

Leave a Comment